நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை கிடையாது: உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன்

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மாநில வாரியாக கேள்வித்தாளை வடிவமைக்காமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை பயன்படுத்த வேண்டும் மேலும் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணயை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்தார்.

இருப்பினும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் வினாத்தாள் கோரப்பட்டது தொடர்பாக சிபிஎஸ்இ வாரியமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் விளக்கமளிக்கமாறு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்