வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் 1000-க்கு மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில், 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர். மேலும் ,12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago