ஒப்பந்த செவிலியர், இருட்டறை உதவியாளர், ஆய்வக நுட்புநர்கள் உட்பட தமிழகத்தில் 787 பேருக்கு பணி நியமன ஆணை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை மற்றும் இருட்டறை உதவியாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட 217 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் 15,409 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ஒப்பந்தப் பணி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்த பிறகு, நிரந்தர காலி பணியிடத்தில் வரிசைப்படி நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுதவிர, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்கு 92 பேர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு 85 பேர் என 177 இருட்டறை (Dark Room) உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படுகின்றன. இங்கு காலியாக உள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர, 21 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 4 பேருக்கு ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் செந்தில்குமார், மருத்துவ தேர்வு வாரியத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரிசுந்தரி, உணவு பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்