போக்குவரத்து ஊழியர் கோரிக்கைகள் குறித்து அரசு குழுவுடன் மீண்டும் பேச்சு

By செய்திப்பிரிவு

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 34 கோரிக் கைகள் குறித்து அரசு குழுவுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப் பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்கள், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி ஆகியவற்றை வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 15-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால், அரசுப் பேருந்துகள் முற்றிலும் முடங்கின. இதையடுத்து, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்க மணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் 16-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1,000 கோடி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண் டிய ரூ.250 கோடி என மொத்தம் ரூ.1,250 கோடியை 3 மாதங்களில் வழங்க தமிழக அரசு ஒப்புக் கொண்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேற்றாத 34 கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க 12 பேர் கொண்ட துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுடன் தொழிற்சங்க நிர்வாகி கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை பல்ல வன் இல்லத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அரசு போக்கு வரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் உட்பட 12 பேரும், 47 தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

போக்குவரத்து ஊழியர் களுக்கு பண்டிகை முன்பணம் வழங்குவது, விபத்துக்கான நிதி வழங்குவது, கல்வி முன்பணம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இறுதி செய்து, ஜூன் 1 அல்லது 2-ம் தேதி அறிவிக்கவுள்ளனர்.

விடுப்பாக கருத வேண்டும்

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறிய தாவது:

அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் ஒப்புக்கொண்ட விஷயங்களை இதுவரை நடை முறைப்படுத்தவில்லை, வேலை நிறுத்தம் செய்த 4 நாட்கள் விடுப்பாக கருத வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அமைச் சர்கள் குழு அதை ஏற்றுக் கொண்டது. அந்த கோரிக்கை இது வரை நிறைவேற்றப்படவில்லை.

ஏற்கெனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி நிலுவையில் உள்ள 34 கோரிக்கைகளை நிறை வேற்றுவது தொடர்பாக துணைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பண்டிகைக் கால முன்பணம் வழங்குவது, கல்வி முன்பணம் வழங்குவது, கல்வி உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமைச்சரிடம் பேசி இறுதி முடிவு செய்து அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்