ஸ்ரீவில்லிபுத்தூர்: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி, உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் வழக்கறிஞர் அசன் முகமது மற்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் மாரியப்பன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட அமர்வு நிதிபதி கிறிஸ்டோபர் பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago