நாகர்கோவில்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், குமரி மீனவர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜெஸ்லின் என்பவர் மகன் ராஜேஷ் குமார்(37). சின்னமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியக்காடு கிராமத்தைச் சேர்ந்த கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணலைச் சேர்ந்த துரைராஜ் ஆகிய 5 மீனவர்களும் கடந்த 21-ம் தேதி சவுதி அரேபியா நாட்டில் கத்திப் என்ற பகுதியிலிருந்து, கலாம் ஹஸ்ஸான் என்பவருக்கு சொந்தமான "ரஸ்மா அல் அவல்" என்ற விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் 22-ம் தேதி கடல் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மீனவர்கள் படகுகளுக்குள் ஒழிந்து கொண்டு உயிர்தப்பினர். எனினும், படகில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு கொள்ளையர் தப்பிச் சென்றனர்.
இதில் மீனவர் ராஜேஷ்குமாரின் இடது கண்ணில் குண்டடி பட்டு மயங்கி கிடந்துள்ளார். சவூதி அரேபிய கடலோர காவல் படை கப்பலில் அவரை ஏற்றி மௌசட் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
6000 மீனவர்கள், 9 நாட்கள்.. இச்சம்பவத்தை அறிந்த சவுதி அரேபியா நாட்டில் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுமார் 6,000-க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கடந்த 23-ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. தங்கள் உயிருக்குபாதுகாப்பை சவுதி அரேபியா அரசுஉறுதி செய்யும் வரை நாங்கள் மீன்பிடிக்கச் செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆட்சியரிடம் மனு: இதுகுறித்து நேற்று தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவ அமைப்பினர், குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago