ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு மஜக ஆதரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடந்தது. முன்னதாக, அங்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு ஆகியோர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவை கோரினர்.

இதைத் தொடர்ந்து, மஜக தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கை: மஜக தலைமை நிர்வாக குழு கூடி ஆலோசித்து, தமிழகத்தின் நலன் கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கட்சியின் துணை பொதுச் செயலாளர் சையது அகமது ஃபாரூக் தலைமையில் 10 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்