அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழை

By செய்திப்பிரிவு

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

சனிக்கிழமை காலை, அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவ மழை வட இந்தியா நோக்கி நகர்ந்தாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பரவலாக மழை பெய்கிறது. மழை மறைவு பிரதேசமான தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 வரையிலான 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கூடலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழையும், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு செ.மீ மழையும் பெய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்