பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் ரத்து

By எஸ்.விஜயகுமார்

சேலம்: ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் - கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயிலின் இயக்கம், ஏற்கெனவே இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில், நாளை (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்- கோவை ஜங்ஷன் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (MEMU) ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் - கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களும், சேலம் - கோவை பயணிகள் (MEMU ) ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் - கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் - கோவை பயணிகள் (MEMU) ரயில் (எண்.06803) மற்றும் கோவை - சேலம் பயணிகள் (MEMU) ரயில் (எண்.06802) ஆகியவற்றின் இயக்கம், நாளை (1-ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்