மதுரை: குட்கா வழக்கில் கைதானவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிவகங்கையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலையை பதுக்கல் தொடர்பாக அம்ரேஷ் என்பவரை போலீஸார் 19.12.2022-ல் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3.90 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் அம்ரேஷ் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா விசாரித்தார்.அரசு சார்பில் மனுதாரருடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 1.30க்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாரர் தலைமறைவாக கூடாது, சாட்சிகளை கலைக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago