முதுமையில் தவிக்கும் மகளிர் ஊர் நல அலுவலர்கள்: பதவி உயர்வு பெற்றதால் ஓய்வூதியம் பெறாமல் இறக்கும் அவலம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் பள்ளி சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊட்டச்சத்து குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன செயல்படுகின்றன. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் உள்பட 2.26 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் ஆசிரியர் பயிற்சி முடித்த சத்துணவு பொறுப்பாளர்கள், 2004-ம் ஆண்டுக்குப்பின் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிந்த அங்கன்வாடி பொறுப்பாளர்கள், அவர்கள் பணிக்காலம், கல்வி தகுதி அடிப்படையில் மகளிர் ஊர் நல அலுவலர்களாகவும், ஊட்டச்சத்து மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

சத்துணவு திட்டத்தில் 25 ஆண்டு காலத்துக்கும் மேல் பணிபுரிந்து, இப்படி ஆசிரியர்களாகவும், மகளிர் ஊர் நல அலுவலர்களாகவும், சத்துணவு மேற்பார்வையாளராகவும் பதவி உயர்வு பெற்ற இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வூதியம், பணப்பயன்கள் இல்லாமல் ஓய்வு பெறுகின்றனர். அதனால், அவர்கள் முதுமையில் உணவுக்கும், மருத்துவ செலவுக்கும் வழியின்றி மரணமடையும் பரிதாபம் தொடர்கிறது.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பார்வையாளர் சங்க மாநிலத் தலைவர் சங்கர் பாபு கூறியதாவது:

ஓய்வூதியம் கிடைக்காமல் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற 1,500 முன்னாள் சத்துணவு பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதவி உயர்வுக்கு வராமல் சத்துணவு திட்டத்திலேயே பணியாற்றி இருந்தால் பணிக்கொடை ரூ.60 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.1,500 பெற்று ஓய்வு பெற்றிருப்போம். அரசின் உத்தரவை ஏற்று, பதவி உயர்வுக்கு வந்த காரணத்தால் எந்த பணப்பலனும் இல்லாமல் ஓய்வு பெற்று கடந்த 10 ஆண்டுகளாக அவதி அடைந்துவருகிறோம். உண்ணாவிரதம், பேரணிகள், பிரச்சார இயக்கங்கள், மாநாடுகள் நடத்திவிட்டோம்.

நீதிமன்றத்தில் தீர்ப்பாணையும் பெற்று கொடுத்துவிட்டோம். ஆனால், ஓய்வூதியம், பணப்பலன்கள் மட்டும் கிடைத்தபாடில்லை. ஓய்வுபெற்ற மகளிர் ஊர் நல அலுவலர்கள், ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் பலர் இறக்கும் தருவாயில் உள்ளனர். பலர் இறந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாதம் ரூ.3,500 வழங்க அரசு பரிசீலனை

பாதிக்கப்பட்ட மகளிர் ஊர் நல அலுவலர் (ஓய்வு) எஸ்.விஷ்ணுகுமாரி கூறியது: சத்துணவுத் திட்டத்தில் பதவி உயர்வு பெறாமல் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்தால் 60 வயது வரை வேலை பார்க்கலாம். ஓய்வு பெறும்போது ரூ.1,500 ஓய்வூதியம், ரூ.60 ஆயிரம் பணப்பலன் பெறலாம். ஆனால், என்னைப்போன்று சத்துணவு அமைப்பாளராக இருந்து பதவி உயர்வு பெற்ற காரணத்தால் கூடுதல் இரு ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பை இழக்கிறோம். ஓய்வூதியம், பணப்பலன்கள் மறுக்கப்படுகின்றன. நான் மட்டும் 86 முறை அரசுக்கு மனுக்கள் அனுப்பியும் இதுவரை ஓய்வூதியம், பணப்பலன் கிடைக்கவில்லை என்றார்.

இதுகுறித்து சமூக நலத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இவர்களுக்கு மாதம் ரூ. 3,500 ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்