செய்தித் துறை இயக்குநர் உட்பட தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், செய்தித் துறையின் புதிய இயக்குநராக விழுப்புரம் ஆட்சியர் மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் கே.பி.கார்த்திகேயன் நெல்லை மாவட்ட ஆட்சியராகவும், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்-செயலர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.பி.ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு மருந்து வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்- செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூடுதல் முதன்மைச் செயலர் டி.எஸ்.ஜவஹர், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குநராகவும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் நீரஜ் மிட்டல், நகர்ப்புற நிதி மற்றும் கட்டுமான மேலாண்மைக் கழக நிர்வாக இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, மொத்தம் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்