நாகர்கோவில்: மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு ஒரு வாரத்துக்குப் பின்னர் நினைவு திரும்பியது.
இலக்கியவாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கடந்த 24-ம் தேதி நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு சுய நினைவின்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரை, முதல்வர் ஸ்டாலின் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். மேலும் உரிய சிகிச்சைக்குஏற்பாடு செய்யுமாறு, சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
முதல்வருக்கு நன்றி கூறி ட்வீட்: இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பின்னர் நேற்று நாஞ்சில் சம்பத் சுய நினைவுக்கு திரும்பினார். அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘முதல்வரின் தனிக்கருணையால் புதிதாக பிறந்தேன். முதல்வரின் பரிவுக்கும், பாசத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன்’ என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago