மதுரை: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை வெளியிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான பதிவுகளை நீக்குமாறு யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தடைசெய்யப் பட்ட ஆவணப்படத்தை தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று வெளியிட திட்டமிட்டனர்.
அதனையொட்டி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நேற்று மாலை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பிபிசி ஆவணப்படம் வெளியிடப்படும் என்று அறிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல் ஆவணப்படத்தை திரையிடக் கூடாது என்று அறிவுறுத்தினர்.
அப்போது போலீஸாருக்கும், வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.செல்வராஜ், மாவட்டப் பொருளாளர் பாவெல் சிந்தன், பகுதிக் குழு செயலாளர் சுரேஷ், தலைவர் குரோனி செந்தில்,சிபிஎம் பகுதிக் குழு செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் ஆவணப்படம் திரையிட அனுமதி வழங்குமாறு போலீஸாரிடம் மனு அளித்துவிட்டு, அங்கிருந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 secs ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago