ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் போட்டி 

By செய்திப்பிரிவு

ஈரோடு: நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மேனகா நவநீதன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு மகளிர் பாசறை இணைச் செயலாளர் மேனகா நவநீதன், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்