சென்னை: இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாகநாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக ஒரு ஆலோசனையை வழங்கி, நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை விடுவிக்க அறிவுறுத்தி இருந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழக சிறைச்சாலைகளில் 66 சதவீத சிறைத்தண்டனை அனுபவித்து நன்னடத்தையோடு இருந்த 60 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து 11 பேர், வேலூரில் இருந்து 9 பேர், கடலூரில் இருந்து 12 பேர், திருச்சியில் 9, கோவையில் 12, மதுரையில் ஒருவர், பாளையங்கோட்டையில் 4, புழல் சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் ஒருவர், கோவை சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் ஒருவர் என மொத்தம் 60 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago