நான் இங்குதான் பேச்சாளராக உருவெடுத்தேன்: பாளை. கல்லூரி நிகழ்ச்சியில் வைகோ உருக்கம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர் மன்ற குடும்ப விழா நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை வி.ஹென்றி ஜெரோம் தலைமை வகித்தார். நிறைவு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ பேசியதாவது: இந்த கல்லூரியில் 1960-ல் வந்து சேர்ந்தேன். இங்கிருந்த மெஸ்ஸில் சாப்பிட்ட உணவுபோல் எங்கும் நான் சுவைத்ததில்லை.

இந்த கல்லூரியில் கட்டுப்பாடு முக்கியமாக இருக்கும். இங்குதான் நானும், வலம்புரிஜானும் பேசி யிருக்கிறோம். வரலாற்று குறிப்புகளை இங்கு விவரிக்க கேட்டு, நான் பேச்சாளராக உருவெடுத்தேன். இக் கல்லூரியில் விளையாட்டு வீரர்களை பெரு மளவில் ஊக்குவித்தனர். கூடைப்பந்தாட்ட அணியில் இருந்தேன் என்று தெரிவித்தார்.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: இந்த கல்லூரியில் 1967-68-ல் படித்தேன். பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கல்லூரி மாணவர்களிடம் நிதி திரட்டி வழங்கினோம். எம்எல்ஏ, எம்பி, மத்திய, மாநில அமைச்சராக நான் பணியாற்ற அஸ்திவாரமாக கிறிஸ்தவ பள்ளிகளிலும், கல்லூரி யிலும் படித்த அனுபவம் கார ணமாக இருக்கிறது. 100-வது ஆண்டு விழாவில் பங்கேற்பது மிகப்பெரும் பாக்கியம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE