சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு, தொடர்ந்துமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுவடைந்து,பிப்.1-ம் தேதி இலங்கை கடற்பகுதியை சென்றடையக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28-ம் தேதி (இன்று) வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.
29-ம் தேதி (நாளை) வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-ம்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், 31-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
» மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 4 நாட்களே அவகாசம்
» புதுச்சேரியில் வரும் மார்ச்சில் பட்ஜெட் - திட்டக்குழு கூட்டத்தில் ரூ.11,500 கோடி நிர்ணயம்
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 28-ம் தேதி (இன்று) தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளிலும், 29-ம் தேதி (நாளை) தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ.வேகத்திலும் சூறாவளி காற்றுவீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago