உதகை | கோடநாடு வழக்கில் 48 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

By செய்திப்பிரிவு

உதகை மாவட்ட நீதிமன்றத்தில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட சயான், தீபு, வாளையாறு மனோஜ், சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி ஆகியோர் ஆஜராகினர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்று, வழக்கு விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு மாவட்டநீதிபதி முருகன் தள்ளிவைத்தார்.

இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாடு சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்க உள்ளது. சிபிசிஐடி போலீஸார் சார்பில் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE