ரூ.44 கோடியில் நவீன வசதிகளுடன் 10 தளங்களாக மாறும் எம்.சி.ராஜா விடுதி: தமிழக அரசு உத்தரவு 

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.44 கோடியில் நவீன வசதிகளுடன் 10 தளங்கள் கொண்ட விடுதியாக எம்.சி.ராஜா விடுதியை மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், “சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் சுமார் 75,000 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும்” என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

இதனை செயல்படுத்து விதமாக, சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்கள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் கட்ட பொதுப் பணித்துறையிக்கு ஆதிதிராவிடர் நல அரசாணை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE