சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத்தரப்பில், "சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. இவற்றை அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகளும் முன்வரவில்லை. பல இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. பருவமழை காரணமாகவும் இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்கள் நோய் போல பரவுவது. எனவே அதன் தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதிதியில் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என பஞ்சாயத்துக்களுக்கு உத்தரவிடலாமே என்று யோசனை தெரிவித்தனர்.
இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14-ம் தேதி வரை வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு செய்யாதபட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago