மேம்பால கட்டுமானப் பணி காரணமாக தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்: 9 மாதங்கள் அமலில் இருக்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: மேம்பால கட்டுமானப் பணி காரணமாக தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு வரை மேம்பால கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் ஜன.28 முதல் செப்.27 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து தெற்குஉஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சிஐடி 1-வதுமெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மா பேட்டை சந்திப்பு,தெற்கு மேற்கு போக்கு சாலை,மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பேருந்துகள், தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்துதெற்கு உஸ்மான் சாலை வழியாகஅண்ணா சாலை சிஐடி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணா சாலையை அடையலாம். அண்ணா சாலை சிஐடி1-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைவழியாக தி.நகர் பேருந்து முனையத்துக்கு செல்லும் வாகனங்கள், வழக்கம் போல செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்