சென்னை: மேம்பால கட்டுமான பணி காரணமாக தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. இதன் விவரம்..
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம்.
» ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு
» அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகிறது தெலங்கானா அரசு: தமிழிசை காட்டம்
அரங்கநாதன் சுரங்கபாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலை அடையலாம்.
அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago