சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.
» அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகிறது தெலங்கானா அரசு: தமிழிசை காட்டம்
» ஒரே நாளில் சென்னையில் 150 வாகனங்கள் பறிமுதல்: 726 தங்கும் விடுதிகளில் சோதனை
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில், இந்தாண்டு தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அவருடன் மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago