கல் எறிந்த அமைச்சர் நாசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கல் எறிந்த விவகாரத்தில் அமைச்சர் நாசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது ஓர் அமைச்சரே ரவுடி போல கல்லை வீசி எறிந்திருப்பது சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம். இந்தச் செயலை செய்துள்ள பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்து, ஓர் அமைச்சர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பாரேயானால், அவருடைய பதவி பறிபோயிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைதான் சட்டம்-ஒழுங்கு சீராக செயல்பட வழிவகுக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்