புகையிலை பொருள் விற்பனையை தடுக்க மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மத்தியஅரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கெனவே,தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்திருக்கிற நிலையில், புகையிலைப் பொருட்களுக்கான தடை நீக்கம் மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, இது தொடர்பாக மத்திய அரசோடு கலந்து ஆலோசித்து தமிழக அரசு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்துக்குள் புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க உரிய சட்டம்கொண்டுவருவது குறித்தும் சட்டவல்லுநர்களுடன் உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்