பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் சிறை: 800 ரவுடிகளை நேரில் எச்சரித்த காவல் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஓர் ஆண்டு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், கொலை முயற்சி, 2-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என குற்றப் பின்னணி கொண்ட 800 பேரை நேற்று முன்தினம் போலீஸார் வீடு தேடிச் சென்று நேரில் சந்தித்தனர்.

அப்போது, ``குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' எனஅவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் தலைமறைவாக உள்ள ரவடிகள் மற்றும் குற்றவாளிகளைப் பிடிக்க அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், ``சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்களுக்கு யார் தொந்தரவு கொடுத்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்