“திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளை சொல்லி மாளாது” - ஜெயக்குமார் 

By செய்திப்பிரிவு

சென்னை: “திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க தினத்தை முன்னிட்டு ராயுபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "திமுக அமைச்சர்கள் செய்யும் அலப்பறைகளைச் சொல்லி மாளாது. ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள், பொதுமக்களை அடிப்பவர்கள், உள்ளாட்சி பிரநிதிகளை அசிங்கப்படுத்துவர்கள் ஆகியோர்தான் திமுகவில் அமைச்சர்களாக உள்ளனர். கல் தூக்கி அடித்த அமைச்சரை இதுவரை பார்த்தது இல்லை. தமிழ்நாடு வெட்கித் தலை குனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது. திமுக கற்காலத்திற்கு சென்று விட்டது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்துக்காக, திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலைஅருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனை திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் அமருவதற்காக, நாற்காலிகளை எடுத்து வருமாறு தொண்டர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நாற்காலிகள் எடுக்க சென்ற தொண்டர், ஒரே ஒரு நாற்காலியை அதுவும் மெதுவாகவும் எடுத்து வருவதை பார்த்து கோபமடைந்த அமைச்சர், அவரை ஒருமையில் பேசியபடி, அங்கிருந்த மண் குவியலில் ஒரு கல்லை எடுத்து அந்த தொண்டர் மீது வீசி எறிந்தார். இந்த வீடியோ காட்சி முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்