ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | கமல் இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக பயணிப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கமல்ஹாசன் பங்கேற்றதும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று முன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

மக்கள் நீதி மய்யம் நிலைப்பாடு

முன்னதாக, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்ற பிறகு இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கமல்ஹாசன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE