பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லாததால் ஓய்வூதியம் நிராகரிப்பு: 28 ஆண்டுகள் போராடிய தியாகிக்கு உயர் நீதிமன்றம் மூலம் விடிவு

By கி.மகாராஜன்

70 ஆண்டுகளுக்கு முன்பு பெறப் பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லை என்ற காரணத்தால் ஓய்வூதியம் மறுக்கப்பட்ட 86 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு 2 வாரங்களில் ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம் பட்டியைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தியாகி எம்.அய்யா தேவர் (86).

இவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், மீனாட்சி கோயில் நுழைவு போரா ட்டத்தில் வைத்தியநாத ஐயருடன் பங்கேற்றுள்ளார். இதனால் அய்யாதேவர் கைது செய்யப்பட்டு 15.4.1943 முதல் 24.9.1943 வரை கர்நாடகம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தியாகி ஓய்வூதியம் கேட்டு தமிழக அரசுக்கு 1988 முதல் மனு அளித்து வருகிறார்.

இந்நிலையில் சிறையில் இரு ந்தபோது 18 வயது பூர்த்தி அடைவில்லை. பிறப்புச் சான் றிதழில் பெயர் இல்லை என்று கூறி, தியாகி ஓய்வூதியம் மனுவை நிராகரித்து 17.10.2012-ல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தியாகி ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக்கோரி அய்யாதேவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் நான் சிறையில் இருந்ததற்கு உடன் இருந்த சிறைவாசிகளான ஏ.சி.பெரியசாமி, ஏ.எம்.லெட்சுமணன் ஆகியோரும் சான்று அளித்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தியாகி ஓய்வூதியம் கோரி முறையான ஆவணங் களுடன் விண்ணப்பித்துள்ளார். மனுதாரரைப் போல அவரது ஆவணங்களும் பழமையானது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பெயர் குறிப்பிடாமல்தான் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

அப்படியிருக்கும்போது மனுதாரர் 70 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழை பெயர் இல்லை என்ற காரணத்துக்காக நிராகரித்ததை ஏற்க முடியாது.

1988-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையில் 70 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்களை தியாகிகள் ஓய்வூதியத்துக்கு பரிசீ லிக்கலாம் என்றுதான் கூறப்ப ட்டுள்ளது. ஆனால், அதில் 70 வயது ஆனவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கூறப்படவில்லை.

மனுதாரர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதைவிட, ஓய்வூதியம் பெற தன்னை தியாகியாக நிரூ பிக்க நடத்திய போராட்டம் கொடு மையானது.

மேலும் 1943 முதல் 1944 வரையுள்ள சிறை ஆவணங்கள் அழிந்துவிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசின் தவறுக்கு மனுதாரரை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. எனவே மனுதாரருக்கு 2 வாரத்தில் தியாகிக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்