சென்னை: மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று ஒடிசாவில் இருந்து தினமும் 7 கோடி கிலோ நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருவதால், தமிழக அனல்மின் நிலையங்களில் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி மின்சார உற்பத்திக்கு 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சார், ஐபி வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து இந்த நிலக்கரி பெறப்படுகிறது.
மத்திய அரசுக்கு கோரிக்கை
வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, வழக்கத்தைவிட மின்தேவையும் அதிகரிக்கும். இதனால், ஒதுக்கப்பட்ட நிலக்கரியைமுழுவதுமாக அனுப்புமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு தமிழக மின்வாரியம் சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.
» எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்
» பாஜகவின் ‘பி டீம்’களாக செயல்படும் 3 கட்சிகள் - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
அதை ஏற்று, தற்போது தமிழகத்துக்கு தினமும் 7 கோடி கிலோ நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago