ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - ஓபிஎஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது தரப்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "நிர்வாகிகள் அனைவரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. கூடிய விரைவில் வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்படும்.

தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே உள்ளது. எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது ஒரே பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது. அதிகாரமிக்க பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவியே உள்ளது. எனவே எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்" என்று உறுதிபட கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE