சென்னை: பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஜனவரி 25-ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் நடைபெறும் என்று பாமக தலைமை நிலையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago