மதுரை: தமிழகத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் அவற்றை அன்றாட சமையலில் பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் நேற்று கத்திரிக்காய் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், வெண்டைக்காய் ரூ.60 முதல் ரூ70 வரையிலும், பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரையிலும், கேரட் ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்றன. இதேபோல், பீட்ரூட் ரூ.50-க்கும், பீன்ஸ் ரூ.60-க்கும், அவரை ரூ.50-க்குமு் விற்றன. சில்லறை கடைகளில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. முட்டைகோஸ், பாகற்காய் உள்ளிட்ட ஒரு சில காய்கறிகள் மட்டுமே விலை குறைவாக விற்கப்படுகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குறிப்பிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்தால் அதே காய்கறியை விவசாயிகள் அனைவரும் பயிரிடுகிறார்கள். ஒவ்வொரு பயிரையும் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பயிரிட வேண்டும் என்ற பயிர் கட்டுப்பாடுகள் வெளிநாடுகளில் உள்ளன. அதுபோன்ற கட்டுப்பாடுகளை இங்கு விதிக்க முடியாது. இந்த சீசனில் இந்த காய்கறிகளை பயிரிடுங்கள் என்று ஆலோசனை மட்டுமே கூற முடியும். இந்த காய்கறிகளை பயிரிடாதீர்கள் என்று தடுக்க முடியாது. மழை பெய்தால் தரிசு நிலங்களும் விளைநிலங்களாக மாறி விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளை பாதிக்கிறது. உற்பத்தி குறைந்து குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகரித்தால் அதனை ஒட்டுமொத்தமாக பயரிட்டு அதன் விலையும் குறைந்து விடுகிறது. வடமாநிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் பெரும் விவசாயிகள். ஆனால், தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம். அவர்களிடம் விழிப்புணர்வு செய்வது சவாலான விஷயம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago