பொள்ளாச்சி: திண்டுக்கல் - பழநி வழித்தடத்தில் செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லா பயணிகள் ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை - பாலக்காடு விரைவு ரயில் காலை நேரங்களில் 7.23 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வந்து, 7.25 மணிக்கு புறப்படும். காலை 7.52 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்து, 7.55 மணிக்கு புறப்படும்.
அதேபோல மறுமார்க்கத்தில் மாலை 5.12 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 5.15 மணிக்கு புறப்படும். பாலக்காடு- திருச்செந்தூர் முன்பதிவில்லா விரைவு ரயில் காலை 7.08 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 7.10 மணிக்கு புறப்படும். உடுமலைக்கு காலை 7.34 மணிக்கு வந்து, 7.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் உடுமலைக்கு இரவு 7.28 மணிக்கு வந்து 7.29 மணிக்கு புறப்படும்.
பொள்ளாச்சிக்கு இரவு 7.58 மணிக்கு வந்து, 8 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரயில் நேர அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அமிர்தா விரைவு ரயில் வழக்கம்போல பொள்ளாச்சிக்கு காலை 5.37 மணிக்கு வந்து 5.40 மணிக்கு புறப்படும். உடுமலைக்கு 6.06 மணிக்கு வந்து 6.07 மணிக்கு புறப்படும்.
» தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத் துறை இருக்காது - மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்
மறுமார்க்கத்தில் உடுமலைக்கு மாலை 6.30 மணிக்கு வந்து 6.32 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சிக்கு இரவு 7.02 மணிக்கு வந்து, 7.05 மணிக்கு புறப்படும். இந்த கால அட்டவணை இன்றுமுதல் நடைமுறைக்கு வரஉள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago