சென்னை: உரிய காலத்திற்குள் வரியை செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் ஆண்டு மதிப்பில் 7 சதவீதம் சென்னை குடிநீர் வாரியத்தால் விதிக்கப்பட்டு ஒவ்வொரு அரையாண்டிற்கும் 3.5 சதவீதம் பிரித்து வசூலிக்கப்படுகிறது. குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி சொத்து வரியின் ஒரு பகுதியாகும். இந்த வரியானது ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் மேற்குறிப்பிட்ட குடிநீர் வரி/கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும் செலுத்திட வேண்டும். எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் நிலுவை இருப்பின், அதை உடனடியாக செலுத்திட வேண்டும்.
செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இணைப்பு துண்டிக்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லையெனில் நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா சொத்து வாரிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் வருவாய் வசூல் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஜப்தி செய்யப்படும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.
» ஈரோடு இடைத்தேர்தலில் இளைய மகனுக்கு வாய்ப்பு கோரியுள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
» 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: முதல்வருக்கு அன்புமணி கடிதம்
நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாகவும் செலுத்தலாம்.
மேலும், பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் ரொக்கமாகவும் செலுத்தலாம். மேலும் நுகர்வோர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினை செலுத்துவதற்கு ஏதுவாக கியூ ஆர் கோடு (Q R Code) மூலம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தியுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago