சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. வேட்பாளர் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று (ஜன.21) காலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக் உள்ளார்.
இதன்படி இன்று காலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாலை பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட தலைவர்களை ஓபிஎஸ் இன்று நேரில் சந்திக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago