குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்க: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.

குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில், "சுதந்திர தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில் 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு அரசால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியர்கள் 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எந்த வித புகார்களும் இன்றி வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்.

26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். இது குறித்து உரிய ஆதாரங்களை புகைப்படத்துடன் அரசுக்கு உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்