ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள மிக பழமையான வசிஸ்டேஷ்வரர் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் சுமார் 52 ஏக்கர் விவசாய நிலத்தை வஃக்பு வாரியத்துக்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் ஆணை வழங்கியதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறும்போது, ‘‘தமிழகத்தில் நடைபெறுவது மு.க.ஸ்டாலின் அரசாங்கம் அல்ல. இங்கு மாலிக்பூர் அரசாங்கம் நடைபெறுகிறது.
ஆற்காடு அடுத்த வேப்பூர் கிராமத்தில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று விவசாயிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 52 ஏக்கர் விவசாய நிலத்தை, எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் வஃக்பு வாரியத்துக்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் வழங்கியது தவறு. அடுத்த 24 மணி நேரத்துக்குள் அந்த நிலத்தை மீட்டு விவசாயிகளிடம் வழங்கவில்லை என்றால் பாஜக சார்பில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாங்கம் இந்து மக்களுக்கு விரோதியாக செயல்படுகிறது. இந்துக்களின் ஓட்டு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலையை இந்து இயக்கங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ளதால், இதனைக் கண்டு திமுக மற்றும் கருப்பு சட்டை அணிந்த 43 பேர் அஞ்சுகின்றனர்.
சமீபகாலமாக இந்து சொத் துக்கள் அபகரிக்கப்பட்டதாக சுமார் 1 லட்சம் புகார்கள் எனது ட்விட்டர் கணக்குக்கு வந்துள்ளது. கூடிய விரைவில் அனைத்து புகார்களையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்து சொத்துக்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago