சென்னை: திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெடி, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் பெற்றோரை இழந்துவாடும் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் கூறியுள்ளார்.
இது போன்று விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி, (60) த/பெ. குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
» உதயநிதியின் துறையை கவனிக்கும் உதயச் சந்திரன்: முதல்வரின் தனிச் செயலர்களுக்கு கூடுதல் துறைகள்
» மக்களைத் தேடி மருத்துவம் புள்ளிவிவரம்: இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ், (வயது 48) த/பெ.ஆசீர்வாதம் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்ச ரூபாயும் காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago