சென்னை: முதல்வரின் தனிச் செயலாளர்கள் கவனிக்கும் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் 4 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச் சந்திரன் ஐஏஎஸ், 2-வது தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ், 3-வது தனிச் செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 4-வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் கவனிக்கும் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், 4-வது தனிச்செயலாளராக இருந்த அனு ஜார்ஜ்க்கு ஒதுக்கப்பட்டிருந்த துறைகள் அனைத்தும் மற்ற 3 தனிச் செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஏற்கெனவே கவனித்து வந்த 11 துறைகளுடன் சுற்றுச்சூழல், இளைஞர் நலன், சுற்றுலா ஆகிய துறைகள் கூடுதலாக கவனிப்பார்.
» காணும் பொங்கல் முடிந்த பிறகு மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்க டெண்டர் விட்ட சென்னை மாநகராட்சி
2-வது தனிச் செயலாளர் உமாநாத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில், ஆதிதிராவிடர், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை துறைகளும், 3-வது தனிச்செயலாளரான சண்முகத்திற்கு கால்நடை மற்றும் மீன்வளத் துறை, கைத்தறி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதல்வரின் நிகழ்வுகளை திட்டமிடுதல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago