கடலூர் / விழுப்புரம்: பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.46.31 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக அனைத்து கடைகளிலும் மது வகைகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஞாயிறு (ஜன.15 ), செவ்வாய் (ஜன.17) ஆகிய 2 நாட்களில் ரூ.16.31 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.7 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 120-க்கு மது விற்பனையானது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜன. 15, 17 ஆகிய இரு நாட்களில் ரூ.30 கோடியே 3 லட்சத்து 48 ஆயிரத்து 180க்கு மது விற்பனை நடந்துள்ளது. பொங்கல்பண்டிகையன்று மட்டும் ரூ.9 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 315-க்கு விற்பனையாகியுள்ளது. திங்கட்கிழமை (ஜன.16) திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago