எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளில் ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா போஸ்டரால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய காலம் முதல் இன்று வரை ஒரே கட்சியில், (அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய பின்னும்) தொடர்கிறார் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா.

2021-ம் ஆண்டு அதிமுக தலைமையைப் பற்றி விமர்சனம் செய்ததாகக் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அன்வர்ராஜா மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சுவரொட்டி ஒட்டுவார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்வர் ராஜா சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், ''தலைவா... நம் கட்சித் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள். நாங்கள் கட்சியைக் காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்...'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்