“மக்கள் மனதில் இன்றளவும் நாயகனாக நிலைத்து நிற்பவர் எம்ஜிஆர்” - கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

சென்னை: "இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து" என்று அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் பிறந்தாளை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தமிழ்த் திரையுலகம் கண்டதிலேயே அதிக அளவு கேளிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்து பெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவரும், இன்றளவும் மக்கள் மனதில் நாயகனாக நிலைத்து நிற்பவருமான மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்து" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தலைவர்கள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்