மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங் களின் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிட்டதாக உற்பத்தியாளர் கள் சங்கமான ‘டான்ஸ்டியா’ தெரி வித்துள்ளது.
தமிழகத்தில் 11 லட்சத்து 50 ஆயி ரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் நேரடியாக 1 கோடி தொழிலாளர்களும், மறைமுகமாக 50 லட்சம் பேரும் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பை நீக்கம் செய்து மத்திய அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ் நாடு சிறு, குறு தொழில்கள் சங்கத் தின் (டான்ஸ்டியா) தலைவர் சி.பாபு, ‘தி இந்து’விடம் கூறியதா வது:
வட்டி தள்ளுபடி செய்ய கோரிக்கை
கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை வர வேற்கிறோம். ஆனால், இதைச் செயல்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 40 சத வீதம் குறைந்துவிட்டது. இந்நிறு வனங்கள் தங்களது உற்பத்திக் குத் தேவையான மூலப்பொருட் களை ரொக்கமாக பணம் கொடுத்து வாங்குகின்றன. மத்திய அரசின் அறிவிப்பால், பணப்புழக்கம் தடை பட்டுள்ளது. மூலப்பொருட்களை வாங்க முடியாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் தற்போது வட மாநில தொழிலாளர்கள் அதிக அள வில் பணிபுரிகின்றனர். இவர்க ளுக்கு முறையாக வங்கிக் கணக்கு இல்லை. இதனால் அவர்களது ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த முடிவதில்லை. ரொக்க மாகத் தரவேண்டி உள்ளது. பணத் தட்டுப்பாட்டால், ஊதி யத்தைப் பணமாகவும் வழங்க முடியவில்லை. இதனால், அவர் கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். கணக்கு வைத்திருக்கும் ஒரு சிலருக்கு வங்கிக் கணக்கில் ஊதி யத்தை செலுத்தினாலும், அவர்கள் பணம் எடுக்க வங்கிகளில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குப் பணிக்கு வர இயல வில்லை. இதனாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாகும்
சிறு, குறு தொழில்களின் உற் பத்தி மீண்டும் பழைய நிலையை எட்ட குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. எனவே இந்த நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள ஓவர் டிராப்ட், ரொக்கக் கடன் ஆகியவற்றுக்கான வட்டியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பாபு கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 secs ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago