கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இன்று (ஜன.17) விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு சுமார் 3 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

கடைகளில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த சந்தைக்கு திருவள்ளூர்,காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருகின்றன.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் மாட்டுப் பொங்கல் மற்றும் அடுத்த நாள் உழவர் திருநாள் விழா கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. மேலும், லாரி ஓட்டுநர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பொங்கல் விடுறையில் சென்றுவிடுவார்கள். அதனால், சந்தைக்கு காய்கறிகள் இன்று வராது.

இந்நிலையில், காய்கறி சந்தைக்குஇன்று விடுமுறை விட முடிவெடுத்துஇருப்பதாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்