சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2 ஆயிரத்து 500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை களில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். செவ்வாய்க்கிழமையான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.
இதன்காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்காவும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். அந்த பூங்காவும் இன்று திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» இன்று காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு
» பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசு
வண்டலூர் பூங்காவில் காணும்பொங்கல் தினமான இன்று பார்வை யாளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால், 20 டிக்கெட்கவுன்ட்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன. பார்வையாளர்களை சோதனையிடும் வரிசைகளும் 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பூங்காவுக்கு 150 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் கோரப்பட்டுள்ளது. பூங்காவின் பல்வேறு இடங்களில் சிறப்பு உதவி மையம், மருத்துவ உதவி மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 23 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago