புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் செயல்பாட்டு அளவில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி என்.வி.என்.சோமுவும் வில்சனும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளதாக மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புள்ளி விவரங்கள் அளிப்போர் யார்? - எம்.பிக்களின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து அவற்றை இணையத்தில் (www.prsindia.org) பதிவேற்றி வருகிறது. பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளைக் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அந்த அறிக்கை என்ன கூறுகிறது என்பதை தற்போது பார்ப்போம்.
செயல்பாடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்சினை குறித்து அவையில் தாங்களே எழுப்பி பேசும் சுயமுயற்சி விவாதங்கள் (Initiated debates), அவையில் அவர்கள் எழுப்பும் கேள்விகள், அவையில் அவர்கள் கொண்டு வரும் தனிநபர் மசோதாக்கள் ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினர்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகின்றன. இந்த மூன்றின் கூட்டுத் தொகை புள்ளிகளாக குறிப்பிடப்படுகின்றன.
அதிக புள்ளிகள் பெற்றவர்கள்: கடந்த 2022ம் ஆண்டில், மாநிலங்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்களில் கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக) 136 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். 131 புள்ளிகளுடன் திமுகவின் வில்சன் 2-ம் இடம் பிடித்துள்ளார்.
» ஜல்லிக்கட்டு: உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் உத்தரவு
» பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் நேபாள விமான விபத்து வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.16, 2023
அதிக கேள்விகளை எழுப்பியவர்கள்: திமுகவைச் சேர்ந்த கனிமொழி என்விஎன் சோமு 125 கேள்விகளை எழுப்பி கேள்விகள் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார். 115 கேள்விகளை எழுப்பி திமுகவைச் சேர்ந்த கே.ஆர்.என். ராஜேஷ்குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
சுயமுயற்சி விவாதங்கள்: அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை 36 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று இந்த பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் ஜி.கே.வாசன் உள்ளார். இவர், 27 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
தனிநபர் மசோதாக்கள்: திமுகவைச் சேர்ந்த வில்சன் 3 தனிநபர் மசோதாக்களை அறிமுகம் செய்து இந்த பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். ஒரு தனிநபர் மசோதாவைக் கொண்டு வந்த திருச்சி சிவா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். | முழுமையான பட்டியல்: > தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடு
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago