பழநி கோயில் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு: அனுமதிச் சீட்டு பெற பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்

By செய்திப்பிரிவு

பழநி: பழநி முருகன் கோயில் இணைஆணையர் நடராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி காலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in,அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in-ல்ஜன.18 முதல் 20-ம் தேதி வரைஇலவசமாக முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம்,ரேஷன் கார்டு - ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மொபைல் எண்ணையும், மின்னஞ்சல் முகவரி இருந்தால் அதையும் குறிப்பிட வேண்டும். ஜன.21-ம்தேதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படும் 2,000 பக்தர்களுக்கு ஜன.22-ம் தேதி பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அதன் பின்பு ஜன.23, 24-ம்தேதி காலை 10 முதல் மாலை5 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்று நகலுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வேலவன் விடுதியில் இலவச அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்