சென்னை: ‘ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவாகப் பேசிய திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி காவல் துறையிடம் ஆளுநர் மாளிகை தரப்பிலும், பாஜக தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி இந்தப் புகாரை அளித்துள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அளித்துள்ள புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் அரசியல் சாசன தலைமை. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு, பேச்சு சுதந்திரத்தின் கீழ் நிச்சயம் வராது. எனவே, இந்த விஷயத்தில் மாநில காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருக்காது என நம்புகிறேன். இதேபோன்று ஒருவர் முதல்வர் குறித்து பேசி இருந்தால் காவல் துறை அமைதியாக இருக்குமா? அந்த நபர் தொடர்ந்து இதுபோன்று இழிவாக பேசி வருகிறார். அவர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் பலர் இருந்த மேடையில் அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். அந்த நபர் அவ்வாறு பேசியதற்கு அமைச்சரும் எம்எல்ஏக்களும்தான் காரணமா என்பதை முதல்வர் விளக்க வேண்டும். அவர் இவ்வாறு பேசிதற்காக இதுவரை யாரும் மன்னிப்பு கோரவில்லை. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் காவல் துறை தோல்வி அடைந்துள்ளது'' என குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago